மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம்-நிறைவு
இருளோடு சேர்ந்து குளிரும் சூழ ஆரம்பித்தது. பெரியவர் கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். கேம்ப் ஃபயர் போட பெரிய இடம் ஒன்றும் இல்லை. விடுதிக்குப் பக்கவாட்டில் இருந்த சிறிய இடத்தில் அமைத்துக்கொண்டோம். பெரியவரும் நம்முடன் சேர்ந்துகொண்டார். மண்ணவனூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்து அவர்களைத் தன் நிலங்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு இந்த விடுதியில் பணிபுறிகிறார்.
மண்ணவனூரின் வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே.
காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகள் தொல்லைக்கு இடையில் விவசாயம் செய்கின்றனர்.
பள்ளிக்குச் செல்வதிலும் அங்குள்ள குழந்தைகளுக்குப் பெரிய ஆர்வம் இல்லை போலும். வயல்
வேலை செய்கின்றனர்.
இருளோடு சேர்ந்து குளிரும் சூழ ஆரம்பித்தது. பெரியவர் கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். கேம்ப் ஃபயர் போட பெரிய இடம் ஒன்றும் இல்லை. விடுதிக்குப் பக்கவாட்டில் இருந்த சிறிய இடத்தில் அமைத்துக்கொண்டோம். பெரியவரும் நம்முடன் சேர்ந்துகொண்டார். மண்ணவனூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்து அவர்களைத் தன் நிலங்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு இந்த விடுதியில் பணிபுறிகிறார்.
இந்தப்
பகுதிக்குக் கேரளாவில் இருந்து இளைஞர்கள் அதிகமாக வருகிறார்களாம். காரணம் இங்கு கிடைக்கும்
மேஜிக் காளான் எனப்படும் போதைக்காளான். உயிருக்கு ஆபத்தான அந்தக் காளான்களை போதைக்காக
அவர்கள் வாங்கி உண்பதாக வருத்தப்பட்டார். இங்கிருக்கும் சிலரும் பணத்துக்கு ஆசைப்பட்டு
இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள். பொதுவாக அவர்கள் தமிழர்களை அணுகுவதில்லை. சாலையில்
காத்திருக்கும் அவர்கள் கேரள வாகனங்களைக் கண்டால் தேடிப்போய் விற்கிறார்கள். காலக்
கொடுமை…
அரட்டை தொடர்ந்துகொண்டிருக்க சூடான சப்பாத்தியும், சிக்கன் கிரேவியும் தேடி வந்தது. வழக்கமான காரமான கிரேவியாக இல்லாமல் தேங்காய் சேர்த்து ஒருவித இனிப்பாகத் தயார் செய்திருந்தார். நன்றாகவே இருந்தது. சப்பாத்திகளை உள்ளே தள்ளிவிட்டு நிறைந்த மனதும், நிறைந்த வயிறுமாய் இரவுக்கு விடைகொடுத்தோம். கடும் குளிருக்குக் கம்பிளி கொடுத்த கதகதப்பில் படுத்தவுடன் தூங்கிப் போனோம்.
காலை 6 மணிக்கெல்லாம் விழிப்புத்தட்ட எழுந்துவிட்டோம். ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு தேனீர் அருந்தக் கிளம்பினோம். காலை, தேனீர் தயார் செய்து வைத்திருப்பதாகச் சொன்ன ஹோட்டல்காரர் இன்னும் கடையைத் திறந்திருக்கவில்லை. நேற்று தேனீர் அருந்திய கடைக்குச் சென்றோம். தேனீர் அருந்திவிட்டு அப்படியே காலாற நடந்தோம்.
எங்கள் அறைக்கு எதிரே |
அந்த நேரத்தில் நாம் மட்டுமே உலாவிக்கொண்டிருந்தோம். ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. மிதமான குளிர் இதமாக இருந்தது. புல்வெளி பனியால் போர்த்தப்பட்டிருந்தது ரம்யமாக இருந்தது.
வழியில் இந்த ஜீவன் ஜீவனைத் துரந்து சாலையில் கிடந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வாகனம் அதற்கு மோட்சத்தை அளித்திருந்தது. யார் யார் இடத்தில் அத்துமீறியது??!!
சாலையில் இறந்து கிடந்த பாம்புக்குட்டி |
அறைக்கு
வந்தோம். குளியலறையில் ஹீட்டர் இருந்தது. ஆனால் அதில் வரும் சுடுதண்ணீர் முகம் கழுவக்கூடப்
போதவில்லை. அந்தக் குளிரில் ஐஸ் போன்ற பச்சைத்
தண்ணீரில் குளித்ததில் கொஞ்ச நேரத்திற்கு நாடி நரம்புகள் வேலை செய்யவில்லை. காலை உணவு
ஹோட்டலில் முடித்துவிட்டுக் கிளம்பினோம். அப்போது தான் மனோ தன் பைக் சாவி காணவில்லை
என்பதை உணர்ந்தார். பையிலும் அறையிலும் இல்லை. கடைசியில் சாவி பைக்கிலேயே இருந்தது.
நேற்று இரவு பைக்கை நிறுத்தும்போது அதிலேயே மறந்துவிட்டிருந்தார். மனோவுக்கு நல்ல நேரம்.
முதலில்
மத்திய அரசு நிறுவனமான தென்மண்டல செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்தைப் பார்க்கச் சென்றோம்.
நுழைவுக் கட்டணம் உண்டு. பண்ணையின் மேற்பார்வையாளர் திரு.கணேசன் அவர்கள் நம்மை வரவேற்றுப்
பண்ணையைப் பற்றி விளக்கினார். பழகுவதற்கு இனிய மனிதர்.
நாம் சென்றபோது நேற்றிரவு
காட்டுப்பன்றியால் சேதப்படுத்தப்பட்ட கேரட் வயலை பணியாட்களுடன் சீர் செய்துகொண்டிருந்தார்.
சுற்றிலும் கம்பிவேலியிடப்பட்ட அந்த வயலை பன்றிகள் வேலிக்கு அடியில் பள்ளம் தோண்டி
உள்ளே வந்து நாசம் செய்திருக்கிறது.
1966ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணை, 1340 ஏக்கர் பரந்த புல்வெளியைக் கொண்டது. செம்மறியாட்டில் இருந்து தரமான ரோமம் எடுப்பதற்கான ஆராய்ச்சி இங்கு நடைபெறுகிறது. ரஷ்ய நாட்டுச் செம்மறியாட்டினத்துடன் நம் நாட்டின் இனத்தைச் சேர்த்து உருவான தரமான ரோமம் தரும் “பாரத் மெரினோ” என்ற இனத்தை நவீன முறையில் கொட்டகை அமைத்துப் பராமரிக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் ரோமங்கள் ராஜஸ்தானில் உள்ள மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே தயராகும் கம்பளியை இங்கே வருவோருக்கு விற்பனையும் செய்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்
கறிக்காக வளர்க்கப்படும் சோவியத் சின்செல்லா மற்றும் வெள்ளை ஜெய்ன்ட் இன முயல்களும்
பராமரிக்கப்படுகிறது.
திரு.கணேசன் அவர்களுடன் |
சேதப்படுத்தப்பட்ட கேரட் வயல் |
1966ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணை, 1340 ஏக்கர் பரந்த புல்வெளியைக் கொண்டது. செம்மறியாட்டில் இருந்து தரமான ரோமம் எடுப்பதற்கான ஆராய்ச்சி இங்கு நடைபெறுகிறது. ரஷ்ய நாட்டுச் செம்மறியாட்டினத்துடன் நம் நாட்டின் இனத்தைச் சேர்த்து உருவான தரமான ரோமம் தரும் “பாரத் மெரினோ” என்ற இனத்தை நவீன முறையில் கொட்டகை அமைத்துப் பராமரிக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் ரோமங்கள் ராஜஸ்தானில் உள்ள மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே தயராகும் கம்பளியை இங்கே வருவோருக்கு விற்பனையும் செய்கிறார்கள்.
வெள்ளை ஜெய்ன்ட் |
சோவியத் சின்செல்லா |
நாம் சென்றபோது ஆடுகள் சுதந்திரமாகப் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தன.
குட்டியும் தாயுமாய் அவை மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
பண்ணையைச்
சுற்றிப் பார்த்தோம். பண்ணைகுள்ளேயே தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதியும் உள்ளது.
பண்ணையில் சிறிய அளவில் கேரட், கடுகு, கோதுமை, பட்டானி போன்றவை பயிரிடப்படுகிறது.
பண்ணையில்
குதிரை ஒன்று மேய்ந்துகொண்டு இருந்தது. அதனை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தோம்.
பண்ணைக்குப் பின்புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப் புல்வெளி மட்டும் தான். வெறும்
ஆட்டுப்பண்ணை என்று எண்ணி வந்த நம் கண்களுக்கு இயற்கை அழித்த விருந்தாகவே தோன்றியது.
பரந்த புல்வெளியும் அதன் ஒருபுறம் இயற்கையான ஏரியும் காணக்கிடைக்காத பேரழகு.
நடுவில்
இருந்த புல் மேவிய குன்றும் அதன் மேல் இருந்த சில பைன் மரங்களும் அற்புதம்!! இப்போது
புரிந்தது உலகநாயகன் ஏன் இங்கே திரைப்படம் எடுக்க வருகிறார் என்று.. “இள நெஞ்சே வா..
தென்றல் தேடி எங்கும் போய்வரலாம்” என்று பாடிக்கொண்டே புல்வெளி முழுதும் சுற்றி வந்தோம்.
கோதுமை வயல் |
இங்கு நமக்குப் பிடித்த மற்றோரு விஷயம் ‘தூய்மை‘.
பண்ணையும் புல்வெளியும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. மனிதர்கள் வந்து செல்லும் இடம்
என்பதற்கு எந்தத் தடையமும் இல்லை. அதற்காகப் பண்ணையின் தலைவர் டாக்டர்.ராஜேந்திரன்
அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்ணையை ஒரு சமயம் மத்திய
அரசு மூடுவதற்காக முயற்சி செய்துள்ளது. இங்கு பணி புரிவோரின் கடும் முயற்சியால் தலைமையகத்தில்
இருந்த நிறுவனத்தின் தலைவர் இங்கு வரவழைக்கப்பட்டு, அவர் பண்ணையை நேரில் பார்த்த பின்
இதன் அருமை உணர்ந்து மூடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
புல்வெளியில்
உலாவிவிட்டுத் திரும்பும்போது முன்னர் மேய்ந்துகொண்டிருந்த குதிரை இப்போது சுற்றுலாப்
பயணிகள் சவாரி செய்யத் தயாராக இருந்தது. சவாரி செய்து மகிழ்ந்தோம். குதிரையின் உண்மையான
கம்பீரம் அதில் சவாரி செய்யும்போது மட்டுமே தெரியும். ஏற்ற இறக்கங்களையுடைய புல்வெளியைப்
பொருட்படுத்தாமல் அது அனாயசமாகச் சுற்றி வந்தது. கணேசன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு
கிளம்பினோம்.
அடுத்து
மண்ணவனூர் ஏரிக்குச் சென்றோம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி. நுழைவுக் கட்டணம்
உண்டு. வாகனம் நிறுத்த வசதி இல்லை. சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றோம்.
நுழைவாயில் அருகிலேயே சிற்றுண்டி மற்றும் தேனீர் விடுதி உள்ளது. ஏரிக்குச் செல்லப்
பத்து நிமிடம் நடக்க வேண்டும்.
பரிசல்காரர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் பரிசலை சுழற்ற கடைசியில் நமக்கும் தலை சுற்றுவதுபோல் ஆகிவிட்டது. ஆனால் தீம் பார்க்குகளில் இருக்கும் ரைடுகளில் கிடைக்கும் திரில்லை ஒரு பரிசல்காரரால் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டோம். இது போன்று கிடைக்கும் எதிர்பாராத சந்தோசத்துக்கு ஈடு ஏதும் இல்லை. இத்தகைய நிகழ்வுகளே பயணத்தை சுவாரஷ்யமாக்குகின்றன. பரிசல்காரருக்கு நன்றிகளைத் தெரிவித்து விடை பெற்றோம்.
முற்றும்….
ஏரிக்குச் செல்லும் பாதை |
சுற்றிலும் புல்வெளியால் சூழப்பட்ட அழகிய ஏரி. இறைவன் வரைந்த ஓவியம் என்றே சொல்ல வேண்டும். கண்டதும் காதல் என்பார்களே அது உண்மை தான். முதல் பார்வையிலேயே தன் அழகில் நம்மை மயக்கி விடுகிறாள். கரையில் அமைக்கப்பெற்ற இருக்கைகள் அவளை நாம் நிதானமாக ரசிக்க உதவுகிறது.
கிராமத்தில் ஆறு குளங்களில் குளித்து மகிழ்ந்த நமக்கு இவ்வளவு அழகான ஏரியைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா?? குதித்துவிடத் தோண்றியது. முடியாது என்பதால் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டோம். தண்ணீரின் குளிர்ச்சி உள்ளங்கால் வழியாக உடலுக்குள் ஏறிச் சில்லிட வைத்தது.
மண்ணவனூர் ஏரி |
பரிசல் பயணத்திற்கு அனுமதி உண்டு. மூங்கிலால் செய்யப்பட்ட பரிசல்கள். பரிசலில் பயணம் செய்தோம். பரிசலில் ஏரியை ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். ஏரியின் மறுபுறம் அமைந்த மரத்தாலான ஒரு சின்னப் பாலம் அவ்விடத்தின் அழகைக் கூட்டியது. பரிசலில் சென்று அவ்விடத்தில் இறங்கி ஏரியைச் சுற்றிக் காலாற நடந்து வரலாம். அதற்கான நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏரியின் நடுவில் பரிசலில் சென்ற போது பரிசல் ஓட்டி நம்மைப் பரிசலை நன்றாகப் பிடித்துக்கொள்ளச் சொன்னார். எதற்கு என்று நாம் யோசிக்கும் போது துடுப்பால் பரிசலை மெதுவாக நின்ற இடத்திலேயே சுழற்றினார். இவ்வளவு தானா என்று நாம் எண்ண, மெதுவாக ஆரம்பித்த சுழற்சி மெல்ல மெல்ல வேகம் எடுத்து அதே இடத்தில் ராட்டினம் போல் வேகமாக சுழன்றது செம திரில்லாக இருந்தது. உற்சாகத்தில் கூச்சலிட்டோம். தென்னரசுவிற்கு தலை சுற்ற ஆரம்பிக்க பரிசலை நிறுத்தச் சொல்லிவிட்டார்.
பரிசல்காரர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் பரிசலை சுழற்ற கடைசியில் நமக்கும் தலை சுற்றுவதுபோல் ஆகிவிட்டது. ஆனால் தீம் பார்க்குகளில் இருக்கும் ரைடுகளில் கிடைக்கும் திரில்லை ஒரு பரிசல்காரரால் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டோம். இது போன்று கிடைக்கும் எதிர்பாராத சந்தோசத்துக்கு ஈடு ஏதும் இல்லை. இத்தகைய நிகழ்வுகளே பயணத்தை சுவாரஷ்யமாக்குகின்றன. பரிசல்காரருக்கு நன்றிகளைத் தெரிவித்து விடை பெற்றோம்.
பைக்கை எடுத்துக்கொண்டு கவுஞ்சி வரை ஒரு ரைடு சென்றோம். வழியெங்கும் மலையைச் செதுக்கிச் செய்யப்பட்ட விவசாய நிலங்களின் அழகை ஆசை தீர ரசித்துவிட்டுத் திரும்பினோம்.
அப்படியே தொடர்ந்து சென்றால் பூண்டியை அடையலாம். மண்ணவனூரைப் போல் பூண்டியும் அழகிய இடம் என்றும் அங்கே தங்க நல்ல விடுதியும் உள்ளது என்பதை அறிந்தோம். பூண்டியை அடுத்த பயணதிற்கு விட்டுவிட்டுத் திரும்பினோம்.
அறையைக் காலி செய்து பெரியவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம். மண்ணவனூரில் நாங்கள் இருந்தது குறைந்த நேரமே என்றாலும் அது நமக்கு நிறைந்த மகிழ்வைக் கொடுத்தது. பொதுவாக மலைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்துவிட்டுக் கீழே இறங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர் குறைந்து வெயில் ஏறும் பாருங்கள் அப்படியே திரும்பி மலைக்கே சென்றுவிடலாம் என்று தோன்றும். அதுவும் இந்த வருடக் கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியது இல்லை. இருந்தாலும் நம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்தப் பயணத்திற்கான நேரம் கைகூடக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதிலும் நம்முடைய காத்திருப்பு பிரிந்திருக்கும் காதலியைக் காணக் காத்திருக்கும் காத்திருப்பை விடக் கொடிது…
காத்திருப்போம் காலம் கைகூட….
முற்றும்….
மண்ணவனூர் பயணிக்க டிப்ஸ்:
Ø மண்ணவனூர் செல்லும் பயணிகள் கொடைக்கானல் நகர் வந்தே செல்ல வேண்டும்.
Ø கொடைக்கானலலில் இருந்து பைன் மரக்காடு செல்லும் சாலையில் சென்று மோயர் பாயிண்டுக்கு முன்பாக வலதுபுறம் பூம்பாறை செல்லும் சாலையில் 35 கிமீ சென்றால் மண்ணவனூரை அடையலாம்.
Ø சாலை பூம்பாறை பிரிவு வரை அருமையாக உள்ளது. அதன் பிறகு கொஞ்சம் மோசம். ஆனால் அனைத்து வாகனங்களும் செல்லலாம்.
Ø 35 கிமீ-யும் காட்டிற்குள் பயணம் என்பதால் இருட்டிய பிறகு பயணிப்பதைத் தவிர்க்கவும்.
Ø மண்ணவனூரில் இரண்டே தங்கும் விடுதிகள் உள்ளன. நாங்கள் தங்கிய விடுதி மிகச் சிறிய அறைகளைக் கொண்ட சுமாரான விடுதி. ஆனால் விடுதி பொறுப்பாளர் தங்கவேல் (மொபைல் எண்:9442023671) மிக நல்ல மனிதர். வேண்டிய உதவிகளை இன்முகத்தோடு செய்து கொடுப்பார்.
Ø நல்ல அறைகள் வேண்டும் என்றால் இரவு கொடைக்கானலில் தங்கிப் பகல் சுற்றுலாவாக மண்ணவனூர் வரலாம்.
[மண்ணவனூர் பயணக்கட்டுரையைப் படித்துவிட்டு, மண்ணவனூர் வனத்துறையில் பணிபுரியும் வனவர் திரு.டேவிட் ராஜா அவர்கள் நம்மை அழைத்திருந்தார். வனத்துறை சார்பாக மண்ணவனூரில் இயற்கையான சூழலில் தங்கவும், உணவும், காட்டுக்குள் சென்றுவர வழிகாட்டி மற்றும் வனத்திற்குள் தங்க கூடார வசதியும் தற்போது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வனத்துறையின் இந்த முயற்சி பாராட்டக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி மகிழலாம். தொடர்புக்கு: திரு.டேவிட் ராஜா, வனவர், செல்போன் எண்:9751495138 ]

Ø பார்க்க வேண்டிய இடங்கள் மண்ணவனூர் ஏரி, தென்மண்டல ஆராய்ச்சி நிலையம் (ஆட்டுப்பண்ணை). ஆட்டுப்பண்ணை என்று தவிர்க்க வேண்டாம். அருமையான இடம்.
Ø தவிர, பார்க்கும் இடமெல்லாம் இயற்கை கொட்டிக் கிடக்கும்.
Ø கிராமத்து உணவகங்கள் போன்ற சிறிய உணவகங்கள் தவிர பெரிய ரெஸ்டாரண்டுகள் இங்கு இல்லை. அரசு மதுபானக் கடை உள்ளது..
Ø போதைக் காளான் அதிகம் கிடைக்கும் இடம். எவரேனும் அதோடு அனுகினால் எச்சரிக்கை தேவை.
சந்தோஷமாய் போய் சந்தோஷமாய் வாங்க…..
நன்றி….
Sema bro.....super ..kodaikanal poi time waste niraiya pannirukkom..next time kandippa visit pannnuvom..thq
ReplyDeleteSure.. kandipa polam
DeleteSuper place ....next leave namma poganum...
ReplyDeleteSure.. we shall go..
Delete